நீடாமங்கலம், மார்ச்.9: கொரடாச்சேரியில் மாற்றுக் கட்சிகளிலிருந்து 60 குடும்பத்தினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திலிருந்து உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு, வடசங்கதி, இடும்பாவனம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி முத்துப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன் ஏற்பாட்டின்படி, கொரடாச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் வேஷ்டி, புடவை இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உட்பட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
