பொன்னமராவதியில் பள்ளி ஆண்டு விழா

பொன்னமராவதி,மார்ச்9: பொன்னமராவதி அன்பு நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளித்தாளார் தியாகராஜன் தலைமைவகித்தார். அன்பு கல்வி அறக்கட்டளை அருன் வரவேற்றார். பள்ளி முதல்வர் உஷா ஆண்டறிக்கை வாசித்தார். தொழிலதிபர்கள் ஜெயபால் ,மணிகண்டன், மதிவண்ணன்,ரமேஷ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்வி அறக்கட்டளை மலர்விழி,ரம்யா,லாவண்யா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றமாணவர்களுக்குபரிசு வழங்கினர். மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரி முதல் பழனியப்பன் சிறுவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் புவனேஸ்வரி, மனிமாலா உட்படபலர் கலந்துகொண்டனர்.முடிவில் ரம்யாஆனந்த் நன்றி கூறினார்.இதனை தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

 

Related Stories: