பொன்னமராவதியில் திமுக சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை

பொன்னமராவதி,பிப்.27: பொன்னமராவதி பகுதியில் கோடை வெயில் தாக்கத்திலிருந்து சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் திமுக சார்பில் நிழற் குடை வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை ரகுபதி முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் விடியல் உணவு, பொதுமருத்துவ முகாம், மஞ்சள் பை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் சாலையோர வியாபாரிக்கு நிழற் குடை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வேந்தன்பட்டியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட பிரதிநிதி மணி மற்றும் நிர்வாகிகள் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கு கோடை கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நிழற் குடை வழங்கினர்.

 

Related Stories: