புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே ஒரே வீட்டிற்குள் 2 விஷப்பாம்புகள்: தீயணைப்புத்துறை உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, மார்ச். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்மானிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். விவசாயி. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டுக்குள் நேற்று 2 விஷப்பாம்புகள் புகுந்து பயமுறுத்ததியுள்ளன.

தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபில் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். இரண்டு விஷ பாம்புகளை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டு விட்டனர். ஒரே நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு விஷ பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுவிட்ட தீயணைப்புத்துறை வரை பொதுமக்கள் பாராட்டினார்.

 

Related Stories: