பொன்னமராவதி,மார்ச்2: பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மேலக்களம் சாலையினை சீர் செய்து புதிதாக தார்சாலை போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தின் மிகப்பெரிய ஊராட்சி திருக்களம்பூர் ஊராட்சி. திருக்களம்பூரிலிருந்து மேலக் களம் வழியாக பிரான்மலை செல்லும் திருக்களம்பூர் ஊராட்சிக்கு கட்டுப்பட்ட சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் கூட பயணிக்க முடியாத அவல நிலை இருக்கிறது. மேலும் மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்களில் கீழே விழுகிற அவல நிலை உள்ளது. இந்த சாலையை உடனே செப்பண்ணிட்டு புது தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று மேல க்களம் பகுதி மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
