கீரமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை

அறந்தாங்கி, மார்ச்.2: கீரமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீரமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி, திண்டுக்கல், பழனி வழியாக கோயம்புத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக கீரமங்கலம் பேரூராட்சி உள்ளது. இந்த பகுதியில் இருந்து கோயமுத்தூர் திண்டுக்கல் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான நபர்கள் பணியும், கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதனால் இந்த பகுதிகளுக்கு பணி நிமிர்த்தமாகவோ, மாணவ, மாணவிகள் ஊருக்கு வந்து செல்லும் போது அதிக அளவில் சிரம்ம ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால் அறந்தாங்கி அரசு பணிமணையில் இருந்து கீரமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு நேரடி அரசு பஸ் வசதி ஏற்படுத்தி திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி வழியாக பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: