புதுக்கோட்டையில் இன்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 9: கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்காக இன்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ , மாணவியர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.

 

Related Stories: