பேராவூரணி அருகே ஆண்டிக்கச்சல் அரசு பள்ளி ஆண்டு விழா

பேராவூரணி, மார்ச்.9: பேராவூரணி அருகே உள்ள ஆண்டிக்கச்சல் இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர் ஷாகிதாபானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நந்தினி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் நீலகண்டன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அன்புமேரி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பட்டிமன்ற நடுவர் தாமரைச்செல்வன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கல்யாண சுந்தரம், தங்கராஜ், சிவக்குமார், நாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மணிமொழி நன்றி கூறினார்.

 

Related Stories: