புதுக்கோட்டையில் எம்.பி தொகுதி உருவாக்க வேண்டும்

புதுக்கோட்டை, மார்ச் 9: புதுக்கோட்டையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.செயலாளர் மகாதீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சட்டம் மற்றும் பொறியியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். யூகலிப்டஸ் காடுகளை அழிக்க வேண்டும். காவிரி, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: