பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

புதுக்கோட்டை,பிப்.28: தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், அனைத்து பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் நேற்று இரண்டாம் நாளாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மின்வாரிய ஊழியர் சம்மேளனத்தின் தலைவர். கிருபா கணேஷ் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் அலுவலகங்களையும் பிரிக்கக் கூடாது. முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறக் கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

 

Related Stories: