கொல்லிமலையில் தொடர்மழை 38வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு: மலைப்பாதையில் போக்குவரத்து முடங்கியது

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.  சீதோஷ்ண நிலை  மாறியுள்ளதால்  கடும் குளிர் காற்று வீசுகிறது. பலத்த மழையின்  காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால்  வனப்பகுதியில்  ஆங்காங்கே மண்  அரிப்பு ஏற்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள  காட்டாறுகளில்   வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் தண்ணீரில்   அடித்துச்செல்லப்பட்டது. அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி  வளைவுகளுடன் கொல்லிமலைக்கு மலைப்பாதை செல்கிறது.

தொடர் மழையின் காரணமாக,  38வது கொண்டை ஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து   பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் நெடுஞ்சாலை  துறையினர், னடியாக சம்பவ இடத்துக்கு சென்று கல், மண்ணை  அகற்றி  போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சரிசெய்தனர். மேலும் அந்த  இடத்தில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க, 3 அடி உயரத்திற்கு  கல் தடுப்புகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: