புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து அடுத்தடுத்து போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கோவை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு அங்கு புதிய அணையை கட்ட கேரள அரசு, ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் அளித்து உள்ளது. அதற்கு ஒரு தனிக்குழுவையும் ஒன்றிய அரசு நியமித்து உள்ளது. அதுபோன்று தற்போது அமராவதி அணைக்கு தண்ணீர் வரும் சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

தமிழக நீராதாரங்களை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்து அடுத்த மாதம் 13ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு செல்லும் சாலையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.அத்துடன் கொங்கு மண்டல நீர் ஆதார உரிமை மீட்புக்குழுவையும் ஏற்படுத்தி, இந்த போராட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளோம். அதற்கு முன்பு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை வரும் 28ம் தேதி முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து அடுத்தடுத்து போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: