பைக் -பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி

புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை குத்தாபாளையத்தை சேர்ந்தவர் கிரி (எ) தமிழ்வளவன் (21). இவரது நண்பர் கலைச்செல்வன் (21). இருவரும் நேற்றுமுன்தினம் இரவு குத்தாபாளையத்தில் இருந்து ஒரே பைக்கில் பரங்கிப்பேட்டைக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடலூரில் இருந்து வந்த அரசு டவுன் பஸ் மீது பைக் மோதியதில் கிரி, கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் திடீரென பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பரங்கிப்பேட்டை போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை போராட்டம் நடந்தது.

The post பைக் -பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: