நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி தனித்தனி விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மூத்த மகன் கருத்தையா ஜெப்ரின், 2வது மகன் ஜோமார்ட்டின், மகள் கேத்தலின் ஆகியோர் நேற்று மதியம் 1 மணியளவில் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இவர்கள் 4 பேரிடமும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமாரின் செல்போனில் இருந்து அவரது குடும்பத்தாரிடம் கடைசியாக பேசியது குறித்தும் விசாரித்து விவரங்களை சேகரித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த மரண வாக்குமுலம் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி தனித்தனி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: