சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.22 கோடி ரொக்கம், 2.50 கிலோ தங்கம் காணிக்கை

மண்ணச்சநல்லூர்: சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் இருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று மொத்தம் 34 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர்.கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ஒரு கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 676 ரூபாய் மற்றும் 2 கிலோ 626 கிராம் தங்க நகைகள்,  6 கிலோ 54 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 95 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இதற்கு முன்பாக கடந்த ஜூலை 22ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.22 கோடி ரொக்கம், 2.50 கிலோ தங்கம் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: