கிரித்தி ஷெட்டியின் ஒரு பாட்டுக்கு 7 செட்

ஐதராபாத்: கிரித்தி ஷெட்டி ஆடும் ஒரு பாடலுக்காக 7 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கும் படம், ‘கஸ்டடி’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக ஐதராபாத்திலுள்ள அன்னபூரணி ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. காட்சிப்படி, இந்த பாடலுக்கு 7 விதமான அரங்குகள் தேவைப்படுகின்றன. அதற்காக இந்த ஸ்டுடியோவிலே 7 செட்களும் அமைக்கப்பட்டன. இந்த செட்டுகளில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி ஆடிப்பாடும் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.

Related Stories: