அதிக பயத்துடன் நடித்த பிரபாஸ்

மாருதி இயக்கத்தில் பிர​பாஸ், மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார், சஞ்​சய் தத், ஜரீனா வஹாப், போமன் இரானி நடித்​துள்ள பான் இந்தியா படம், ‘தி ராஜா சாப்’. தமன் இசை அமைத்​துள்​ளார். காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இது, வரும் ஜனவரி 9ம் தேதி மற்ற மொழிகளிலும், ஜனவரி 10ம் தேதி தமிழிலும் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரபாஸ் பேசுகையில், ‘எப்போதுமே நான் மாஸான, ஆக் ஷன் கலந்த பொழுது​போக்கு படங்​களிலேயே நடிக்கிறேன். டைரக்டர் மாரு​தி​யிடம் கலர்​ஃபுல்​லான பொழுது​போக்கு கதை ஒன்றை கேட்டேன். உடனே அவர் காமெடியுடன் கூடிய ஹாரர் கதையை சொன்னார். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை ஆச்​சரியப்​படுத்​தும். இது பாட்​டி, பேரன் கதை. பாட்​டி​யாக ஜரீனா வஹாப் நடித்​துள்ளார்.

படத்தின் நிஜ ஹீரோ, தயாரிப்​பாளர் விஸ்​வபிர​சாத். திட்டமிட்டிருந்த பட்ஜெட்டை மீறி, கடந்த மூன்று வருடங்களாக படப்பிடிப்பு நடத்தினோம். அதனால் நாங்கள் மிகவும் பயந்தோம். ஆனால், தயாரிப்பாளர் மட்டும் எதற்​கும் பயப்​பட​வில்​லை. கிளை​மாக்ஸ் வேறுவித​மாக இருக்​கும். அதை மாரு​தி பேனா​வால் எழு​தி​னா​ரா, இயந்​திர துப்​பாக்​கி​யால் எழு​தி​னாரா என்று தெரிய​வில்​லை. இதற்கு முன்பு பார்த்திருக்காத புதிய கிளை​மாக்​ஸாக ரசிகர்​களை மகிழ்விக்​கும். எனது படம் ரிலீசாகும் நாளில் சீனியர்​களின் படங்​களும் வரு​கிறது. அவர்​களிடம் இருந்​து​ நிறைய விஷயங்களை கற்​றுக்​கொண்​டேன். அவர்​களின் படங்​கள் வெற்​றி​பெற வேண்​டும். அவர்​களின் படங்​களு​டன் எனது படமும் வெற்றிபெற்றால் அதிக மகிழ்​ச்சி அடைவேன்’ என்றார்.

Related Stories: