ஷாருக் பற்றி தீபிகா

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோனுடனான கெமிஸ்ட்ரி குறித்து ஷாருக்கான் கூறுகையில், ‘என்னையும், தீபிகாவையும் பற்றி அனைவருக்கும் தெரியும். காதல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்றவற்றுக்கு ஒரு காரணம் வேண்டும்.

 எனவே, நீங்கள் என்னிடம் என்ன கேட்டாலும், நான் தீபிகா படுகோன் கையை முத்தமிடுவேன். அதுவே பதில்’ என்றார். ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி பற்றி தீபிகா படுகோன் கூறும்போது, ‘இப்படத்தில் எங்கள் கெமிஸ்ட்ரி தெளிவாக இருந்தது. எங்கள் கேரக்டர்கள் வித்தியாசமாக இருந்தன. அதை சிறப்பாகச் செய்ய வைத்தது எங்கள் உறவு மற்றும் நாங்கள் பகிர்ந்துகொள்ளும் அன்பும், நம்பிக்கையும்.

ஷாருக்கான் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது’ என்றார். கடந்த 2007ல் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் ஷாருக்கான் ஜோடியாக அறிமுகமான தீபிகா படுகோன், பிறகு ‘ஹேப்பி நியூ இயர்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். தற்போது 4வது முறையாக ‘பதான்’ படத்தில் இணைந்துள்ளார்.

Related Stories: