கப்பல் படை அதிகாரியாக நடிக்கிறார் யஷ்

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் பிரபலமான யஷ், அடுத்து ‘கேஜிஎஃப் 3’ படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பிரசாந்த் நீல் தெலுங்கில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்குவதில் பிசியாக இருப்பதால், யஷ் நடிக்கும் புதிய படத்தை நார்தன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னடத்தில் ஹிட்டான ‘முஃப்டி’ என்ற படத்தை நார்தன் இயக்கி இருந்தார். தற்போது இப்படம் ‘பத்து தல’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. கிருஷ்ணா இயக்குகிறார். சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கும் படம், யஷ்சின் 19வது படமாகும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்படுகிறது. முழுநீள ஆக்‌ஷன் படம் என்பதால், இதில் ஏற்றுள்ள கப்பல் படை அதிகாரி கேரக்டருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் யஷ், தற்போது எந்த விழாவுக்கும் செல்லாமல் இருக்கிறார். யஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக சஞ்சய் தத் நடிக்கின்றனர். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு இறுதியில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி யஷ் அறிவிக்கிறார்.

Related Stories: