தங்கை திருமணத்துக்காக பெல்ஜியம் சென்ற ஆண்ட்ரியா

சென்னை: தங்கையின் திருமணத்துக்காக பெல்ஜியம் சென்று வந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் 2, மாஸ்டர், துப்பறிவாளன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. இப்போது பிசாசு 2 படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார். கா என்ற படத்திலும் நடிக்கிறார். இவரது தங்கை நாடியா. இவர் பெல்ஜியத்தில் தனது பெற்றோருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவர் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் பெல்ஜியத்தை சேர்ந்த செட்ரிக் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் பெல்ஜியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் ஆண்ட்ரியா கலந்துகொண்டார். இது குறித்து ஆண்ட்ரியா கூறும்போது, ‘நமக்கு நெருக்கமான உள்ளங்கள் உலகில் குறைவு. அப்படி அன்பான உள்ளத்துக்கு பிடித்த அன்பானவர்களை சேர்த்து வைப்பதுதான் சந்தோஷம். அந்த சந்தோஷத்தை எனது குடும்பம் இப்போது அனுபவித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் நேரம் கழிக்கும்போது என்னை நானே மறந்துபோகிறேன். பறவையாக மாறி பறந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.

Related Stories: