ஹீரோவாக நடிக்கும் சதீஷ்

காமெடியனாக இருந்த சதீஷ் தற்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கி உள்ளார். நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது மீண்டும் இன்னும் டைட்டில் வைக்கபடாத படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மோனிகா சின்னகொட்லா நடிக்கிறார். பாலாஜி மோகனின் உதவியாளர் பிரவீண் சரவணன் இயக்குகிறார். விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கின்றார். ரவி இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மானசா சவுத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா,  புகழ்  உள்பட பலர் நடிக்கிறார்கள்

Related Stories: