5 இசை அமைப்பாளர்கள் உருவாக்கிய இசை ஆல்பம்

ஜீ. வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள புத்தம் புது காலை இசை ஆல்பம்  அமேசன் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த இசை ஆல்பம் 5 தனித்த எபிசோட்களுக்கான மாறுபட்ட மற்றும் அசல் பாடல்களைக் கொண்டுள்ளது. டைட்டில் பாடலை ஜி.வி.பிரகாஷ் எழுதி, இசை அமைத்து பாடி உள்ளார். மீதமுள்ளவை  5 இசையமைப்பாளர்களால் இசை அமைக்கப்பட்டுள்ளது.

'நிழல் தரும்' என்ற பாடலுக்கு பிரதீப் குமார் இசையமைத்து பாடி உள்ளார். வாசுகி பாடலை எழுதி உள்ளார். ''முககவச முத்தம்'' பாடலை ஷான் ரோல்டன் பாடி இசையமைத்துள்ளார். பாலாஜி மோகன் பாடலை எழுதி உள்ளார்.  ''தனிமை என்னும்'' எனும் பாடலுக்கு கவுதம் வாசு வெங்கடேசன் இசை அமைத்து சுசாந்திகாவுடன் இணைந்து பாடி உள்ளார், ஹலிதா ஷமீம்  பாடலை எழுதி உள்ளார்.  ''முகமூடி'' என்ற பாடலை எழுதி, இசையமைத்துள்ளார் கேபர் வாசுகி. விசிலர் என்ற பாடலை கார்த்திகேய மூர்த்தி பாடி இசை அமைத்துள்ளார். சபரி சண்முகம் எழுதி உள்ளார்.

Related Stories: