இசை அமைப்பாளரின் காதலியான நடிகரின் முன்னாள் மனைவி

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், படங்களை இயக்கிய சிவாவின் தம்பி பாலா. தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பாலா மலையாளத்தில் முன்னணி நடிகராகி ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த 2010ம் ஆண்டு அம்ரிதா சுரேஷ் என்கிற மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். இதன்பிறகு பாலா மறுமணம் செய்து கொண்டார். அம்ரிதா சுரேஷ் தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியாகி உள்ளது. கோபிசுந்தர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: