கடந்த 2017ல் வெளியான ‘கல்ஃப்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், டிம்பிள் ஹயாதி. தொடர்ந்து ‘யுரேகா’, ‘கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான ‘தில்மார்’ என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமான அவர், முன்னதாக தமிழில் பிரபுதேவாவுடன் ‘தேவி 2’, விஷாலுடன் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ரவிதேஜா ஜோடியாக ‘பிஎம்டபிள்யு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கிஷோர் திருமலா இயக்க, பீம்ஸ் செசிரொலியோ இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பெல்லா பெல்லா’ என்ற பாடல் காட்சியில் ரவிதேஜாவுடன் ஆஷிகா ரங்கநாத் ஆடியிருந்தார்.
தவிர, ‘அத்தம் முந்து’ என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இதில் ரவிதேஜா, டிம்பிள் ஹயாதி ஆடியுள்ளனர். இப்பாடல் யூடியூப்பில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் யார் ஹீரோயின் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வரும் சங்கராந்தி பண்டிகையன்று படம் திரைக்கு வருகிறது.
