‘பார்க்கிங்’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ படத்தில் அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கர், இதில் தனது ஜோடியாக நடித்த கவுரி கிஷனுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. ராஜ்குமார் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். சரஸ்வதி மேனன், கே.பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் நடித்துள்ளனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்ய, ஆர்ஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணதாசன் தயாரித்துள்ளார்.
ராஜ்குமார் ரங்கசாமி கூறுகையில், ‘உண்மை சம்பவத்தை தழுவி, இன்றைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை எழுதி, ஃபேமிலி எண்டர்டெயினராக இயக்கியுள்ளேன். ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் ஜோடியின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவரும்’ என்றார்.
