டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி

சென்னை: ‘இறுதிப் பக்கம்’ திரைப்படத்தை தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘டியர் ரதி’. இந்தப் படத்தை இறுதிப் பக்கத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிரவீன் கே. மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை பற்றி இயக்குனர் பேசும்போது, ‘‘பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து டேட்டிங்கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான். .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் வர அதை எப்படி எதிர்கொண்டார்கள்?

என்பதுதான் ‘டியர் ரதி’ படத்தின் கதை’’ என்கிறார். படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார். வில்லனாக ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – ஜோன்ஸ் ரூபர்ட். ஒளிப்பதிவு – லோகேஷ் இளங்கோவன். படத்தொகுப்பு – பிரேம். நிர்வாகத் தயாரிப்பு – மனோ வி கண்ணதாசன். தயாரிப்பு நிர்வாகம் – ஹென்றி குமார். இப்படம் வரும் ஜனவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

Related Stories: