கிரைம் திரில்லர் தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்

சென்னை: ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப்தொடர், ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு வெளியாகிறது. ஜெஸ்வினி எழுதி இயக்க, பேரபிள் பிக்சர்ஸ் சார்பில் தேவன் சார்லஸ், பிரவீன் குமார், சரண்யா வீரமணி தயாரித்துள்ளனர். அஷ்வின் குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள கிரைம் திரில்லரான இதற்கு என்.எஸ்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அஷ்வத் இசை அமைத்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

தூள் பேட்டை பகுதியில் துணை ஆணையராக பொறுப்பேற்கும் அஷ்வின் குமார், அங்கு நடக்கும் 3 கொலைகள் பற்றிய விசாரணையை தொடங்குகிறார். முதல் 2 எபிசோடுகளில் கிரைம் திரில்லர் அம்சங்களுக்கு குறைவின்றி ஏராளமான கேள்விகளை எழுப்பும் திரைக்கதை, ரசிகர்களுக்கு அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. முக்கிய வேடங்களில் குரு லஷ்மன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி சர்மா, சவுந்தர்யா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வாமித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலமைான் நடித்துள்ளனர்.

Related Stories: