அர்ஜூன் தாஸ் ஜோடியான அன்னா பென்

சென்னை: வில்லனும், குணச்சித்திர நடிகருமான அர்ஜூன் தாஸ், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு முன்பு அவர், சூரி நடிப்பில் வெளியான ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நடித்திருந்தார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, வடிவுக்கரசி நடிக்கின்றனர். படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகிய நால்வரை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகிறது. ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories: