பார்வதி நாயரின் உன் பார்வையில் வரும் 19ம் தேதி சன் நெக்ஸ்ட்டில் ரிலீஸ்

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட், தனது பிரபலமான ‘டைரக்ட் டு சன் நெக்ஸ்ட்’ பிரீமியர் பட்டியலில், புதிதாக ஒரு அதிரடி திரில்லரை சேர்த்துள்ளது. வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை முதல், பார்வதி நாயர் நடிப்பில் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘உன் பார்வையில்’ என்ற படத்தை பார்த்து ரசிக்கலாம். இதில் பார்வையற்ற பெண்ணாக மிகவும் அழுத்தமான, உணர்ச்சிகரமான ஒரு கேரக்டரில் பார்வதி நாயர் நடித்து அசத்தியுள்ளார்.

கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களை தொடர்ந்து உண்மையை தேடும் அவரது பயணம் ரகசியங்களும், திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகிற்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். தனது வலுவான நடிப்பால் படத்தை முழுமையாக தாங்கும் பார்வதி நாயரின் நடிப்பு, இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். முக்கிய வேடங்களில் மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராம், நிழல்கள் ரவி நடித்துள்ளனர்.

படம் குறித்து பார்வதி நாயர் கூறுகையில், ‘பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப்பெரிய சவாலாகவும், மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ‘உன் பார்வையில்’ படத்தை சன் நெக்ஸ்ட்டில் அனைவரும் பார்ப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார். மேலும் சன் நெக்ஸ்ட்டில், புதிய எக்ஸ்குளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லரான ‘தீயவர் குலை நடுங்க’ படத்தையும் பார்த்து ரசிக்கலாம். இதில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளனர்.

Related Stories: