மன உளைச்சலில் புலம்பும் மீரா வாசுதேவன்

ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை 2005ல் காதல் திருமணம் செய்து 2007ல் விவாகரத்து செய்த மீரா வாசுதேவன், 2012ல் நடிகர் ஜான் கொக்கேனை காதல் திருமணம் செய்து விவாகரத்து மூலம் அவரை பிரிந்தார். 2024ல் ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை காதல் திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்துள்ள மீரா வாசுதேவன், தற்போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவர் கூறுகையில், ‘எனக்கு மட்டும்தான் எனது வலியும், வேதனையும் தெரியும். நான் தேர்வு செய்ததற்கும், அதற்கான முடிவுக்கும் நான்தான் பொறுப்பு. என் வாழ்க்கையில் இருந்தவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

எனது நம்பிக்கைதான் தவறாகிவிட்டது. இதற்கு ஒரே வழி, எல்லாவற்றையும் சுலபமாக கடந்து செல்வதுதான். சமூக வலைத்தளங்களில் கருத்துகள் சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த விமர்சனங்கள், தாக்குதல்கள், ஜட்ஜ்மெண்டுகள் என்னை பாதிக்காது. எனக்கு என் குடும்பம் துணையாக இருக்கிறது. பாசிட்டிவ்வான சில மனிதர்கள் சூழ்ந்திருக்கும்போது, யாருடைய விமர்சனமும் என்னை பாதிக்காது. பிரிவுகள் வலி மிகுந்தவை. அதன் பாதிப்பு நமக்கு கடைசிவரைக்கும் இருக்கும். நான் எல்லா நெகட்டிவ்வையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்கிறேன். விவாகரத்து ஆனவர்கள் ஏற்கனவே வலியில் இருப்பார்கள். தயவுசெய்து அவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்றார்.

Related Stories: