விஜய்சேதுபதி படம் மீண்டும் தள்ளிவைப்பு: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், ’மாமனிதன்’. சீனு ராமசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசை அமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்ட இந்தப்படம் கொரோனா உள்ளிட்ட சில பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.மே 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்போது, இதன் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தை வெளியிடும் ஆர்.கே.சுரேஷ் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால், ’மாமனிதன்’ படத்தின் வெளியீடு மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட ’மாமனிதன்’ தகுதியான படம். அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

Related Stories: