தமிழில் மீண்டும் கல்யாணி பிரியதர்ஷன்

சென்னை: ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’, ‘பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப் படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல’ வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார்.எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன்.ஆர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Related Stories: