சென்னை: ‘சேரன் பாண்டியன்’, ‘புத்தம் புது பயணம்’, ‘முதல் சீதனம்’, ‘சிந்துநதி-பூ’ உள்பட பல்வேறு வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளவர், சவுந்தர்யன். சமீபத்தில் லெனின் வடமலை இயக்கத்தில் வெளியான ‘யாரு போட்ட கோடு’ என்ற படத்துக்கு இசை அமைத்த அவர் கூறுகையில், ‘இப்படத்தில் ‘அச்சச்சோ… மனசும் வந்துச்சோ’, ‘என்னோட கூட்டாளி நீதான்’, ‘தேன் இருக்கும் எடத்த தேடி கண்டுபிடிக்கட்டுமா’ போன்ற பாடல்கள் இளசுகள் கொண்டாடும் பாடல்களாக மாறியுள்ளது. எனக்கு வயது ஆகலாம். ஆனால், என் இசைக்கு வயது ஆகவில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப இசை அமைத்து வருகிறேன். எனது மகன் அமர்கீத், தமிழில் சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். எனக்கும் சில வாய்ப்புகள் வந்துள்ளது’ என்றார்.
