சர்ச்சை ஆனது பிரணிதாவின் பாதபூஜை

பெங்களூரு: நடிகை பிரணிதா சுபாஷ் தனது கணவருக்கு பாதபூஜை செய்த விவகாரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கன்னட நடிகை பிரணிதா சுபாஷ், தமிழில் ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித் துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆர்னா என்று ெபயரிட்டுள்ளார். தற்போது ‘ரமண அவதாரா’ என்ற கன்னடப் படத்தில் பிரணிதா சுபாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆடி அமாவாசை அன்று பிரணிதா சுபாஷ் தனது கணவர் நிதின் ராஜூவுக்கு பாதபூஜை செய்தபோது எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அந்த போட்டோக்களைப் பார்த்த சிலர், ‘படங்களில் கவர்ச்சியாகவும், மாடர்னாகவும் வலம் வரும் பிரணிதா சுபாஷ், ஆணாதிக்க கொள்கையுடன் இணைந்து வாழத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது’ என்று கேலியும், கிண்டலும் செய்து கமென்ட் வெளியிட்டனர். உடனே இதற்கு பதிலடி தரும் வகையில் பிரணிதா சுபாஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் திரைப்படங்களில் மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்பதற்காக, சிறுவயதில் இருந்தே பார்த்துப் பார்த்து வளர்ந்த பாரம்பரிய சடங்குகளை கடைப்பிடிக்காமல் இருக்க முடியாது. நான் நீங்கள் அனைவரும் அறிந்த மாடர்ன் பெண்ணாகவே இருந்தாலும், மனதளவில் குடும்பப்பாங்கான பாரம்பரிய வழிமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரு பெண்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: