தேசியக்கொடியை டிபியில் வைத்த திரை நட்சத்திரங்கள்

சென்னை: இந்தியா 75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சுதந்திரத்தின் பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில், பிரதமர் மோடி நாட்டு மக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் தங்கள் டிபியில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இதையொட்டி பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேசியக்கொடியைப் பதிவேற்றி வருகின்றனர். மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், கின்னஸ் பக்ரூ, பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருக்கும் டிபியில் தேசியக்கொடியை பதிவேற்றி இருக்கின்றனர்.

Related Stories: