நடிகைக்காக பெங்காலி கற்ற கமல்ஹாசன்: ஸ்ருதி ஹாசன் புது தகவல்

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், பெங்காலி என பல்வேறு மொழிகளை கமல்ஹாசன் பேசுவார். இந்த நிலையில், கமல்ஹாசன் பெங்காலி மொழி படத்தில் நடிக்கும்போது அந்த மொழியை ஏன் கற்றுக்கொண்டார் என்பது குறித்து கமலின் மூத்த மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் பங்கேற்றனர். இந்த பேட்டியில் கமல் ஹாசன் குறித்து பேச்சு வரும்போது, ‘‘அவர் ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் சிறந்தவர், ஒரு பெங்காலி படத்தில் நடிப்பதற்காக பெங்காலி மொழியை அவர் கற்றுக்கொண்டார்’’ என சத்யராஜ் கூற, ‘‘அது உண்மையில்லை அவர் ஏன் பெங்காலி மொழி கற்றுக்கொண்டார் என உங்களுக்கு தெரியுமா?’’ என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பினார்.

‘‘அப்பா (கமல் ஹாசன்) பெங்காலி நடிகை அபர்ணா சென் என்பவரை காதலித்தார், அதற்காகத்தான் அவர் பெங்காலி மொழி கற்றுக்கொண்டார். அந்த நடிகையின் பெயரைதான் ‘ஹேராம்’ திரைப்படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்துக்கு அப்பா வைத்தார்’’ என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Related Stories: