கொலை படத்துக்காக 58 ஆண்டுக்கு பிறகு ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல் ரீமிக்ஸ்

சென்னை: பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல், கொலை படத்துக்காக மீண்டும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 1964ம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர். ராதா நடிப்பில் வெளியான படம் ‘புதிய பறவை’. இந்த படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் பி.சுசீலா பாடிய பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலை இப்போது ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் கொலை. இந்த படத்தை பாலாஜி குமார் இயக்குகிறார். இவர் விடியும் முன் என்ற படத்தை இயக்கியவர்.

இந்த படத்துக்கு பாடகர் கிரிஷ் இசையமைக்கிறார். அவரது இசையில் புதிய பறவை படத்தில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷால் பாடியிருக்கிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி பாடுவதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகள் கழித்து இந்த பாடல் மீண்டும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த பாடலுக்கான வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

Related Stories: