வெளிநாடுகளில் பைக் பயணம் செல்லும் அஜித்

நடிகர் அஜித்குமார் அடுத்த வருடம் வெளிநாடுகளில் பைக் பயணம் செல்ல உள்ளார்.  கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், பைக் பயணத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்.  இவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.

அதற்கான பயணத்தை 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தொடங்கினார். அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணித்தார். அதை தொடர்ந்து தன்னுடைய 61-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அந்தப் படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் தன்னுடைய பைக் பயணத்தை தொடங்கினார்.

அந்த பயணத்தை சண்டிகர், குலுமணாலி, கார்கில் ஸ்ரீநகர் ஜம்மு என பயணித்து கேதார்நாத் -  பத்ரிநாத்தில் பயணத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களுக்கு அவர் விரைவில் பயணிக்க உள்ளார். அதே போல் அடுத்த ஆண்டு வெளிநாடுகளின் பைக் பயணத்தை தொடங்குவார் என தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக இமய மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு சென்ற நடிகர் அஜித் பயணத்தை முடித்திருக்கிறார். இதை தொடர்ந்து அவருடைய 61வது படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்கிறார்.

Related Stories: