ஹரீஷ் கல்யாணுக்கு திருமணம்

சென்னை: நடிகர் மற்றும் பாடகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ உள்பட நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஹரீஷ் கல்யாண். அவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நர்மதா உதயகுமாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் நடக்கிறது. இதுகுறித்து ஹரீஷ் கல்யாண் கூறும்போது, ‘இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் நேரத்தில் அன்பும் ஆசியும் தேவை’ என்றார்.

Related Stories: