52 வயதிலும் இளமையாக தெரிய ரூ.50 ஆயிரத்துக்கு முக கிரீம் வாங்கிய தபு

மும்பை: முதுமையிலும் இளமையாக தோன்றுவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு முக கிரீம் வாங்கியதாக கூறியுள்ளார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிறைச்சாலை, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை தபு. அவருக்கு இப்போது 52 வயதாகிறது. முகப்பொலிவை இழந்து வருவதால் அவர் வருத்தம் அடைந்துள்ளார். இது பற்றி தபு கூறியது: இந்த வயதிலும் அழகாக இருக்கிறேன் என பலரும் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம், உனது முகம் பொலிவிழந்து வருகிறது என யாராவது கூறிவிட்டால் கவலைப்படுகிறேன். எனது டிசைனர், நான் இயற்கையான மூலிகைகளால் ஆன பொருள்களை முகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

அவற்றை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என சொல்கிறார். அதுபோல நான் நிறைய பயன்படுத்தியுள்ளேன். சில சமயம், அதையும் மீறி, கெமிக்கல் கிரீம் கூட நமக்கு தேவைப்படுகிறது. இதற்காக சமீபத்தில் நான் ரூ.50 ஆயிரம் கொடுத்து ஒரு கிரீமை வாங்கினேன். இது எனது முகத்துக்காக பயன்படுத்தி பார்த்தேன். பெரிதாக ரிசல்ட் கிடைக்கவில்லை. ஒரு சாதாரண கிரீமுக்காக ரூ.50 ஆயிரம் செலவிட்டதை வீட்டில் எல்லோரும் கண்டித்தார்கள். அதனால் அதை திரும்பவும் வாங்கவில்லை. இனி மகிழ்ச்சியாக இருக்க மட்டும் பழகிக் கொள்கிறேன். அதுதான் முகத்துக்கும் ஜொலிப்பை தரும் என நம்புகிறேன். இவ்வாறு தபு கூறினார்.

Related Stories: