அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு துணிவு என தலைப்பிட்டுள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை வினோத் இயக்கி வருகிறார். இதில் சஞ்சய் தத், மஞ்சு வாரியர், ஜான் கோகன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. சில தலைப்புகள் பரிசீலனையில் இருந்தது. கடைசியாக துணிவே துணை என்ற தலைப்பு தேர்வாகும் என கூறப்பட்ட நிலையில் படத்துக்கு துணிவு என தலைப்பிட்டுள்ளனர். இத்துடன் அஜித் துப்பாக்கியுடன் தோன்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கை வைரலாக்கினர்.

Related Stories: