ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு மீண்டும் ஆண் குழந்தை

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். சவுந்தர்யா - அஸ்வின் விவாகரத்துக்கு பின்னர் வேத், சவுந்தர்யா உடனே வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் மறுமணம் நடந்தது. 

இந்நிலையில் கர்ப்பம் அடைந்த சவுந்தர்யாவுக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சவுந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடவுளின் அபரிமிதமான கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், வேத்தின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.

Related Stories: