சூப்பர் குட் பிலிம்சின் 100வது படத்தில் விஜய்: ஜீவா தகவல்

சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிக்கிறார். இத்தகவலை நடிகர் ஜீவா நேற்று உறுதி செய்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தை பிரமாண்டமான முறையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது.ஏற்கனவே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜகான்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார். தற்போது வம்சி பைடிபள்ளி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வரும் அவர், பிறகு ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து சூப்பர் குட் பிலிம்சின் 100வது படத்தில் நடிக்கும் விஜய், சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார். அடுத்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இயக்குனர் முடிவாகவில்லை.இதுகுறித்து நேற்று ஆஹா தமிழ் ஓடிடி தளம் விழாவில் பங்கேற்ற ஜீவா கூறுகையில், ‘எங்களது சூப்பர் குட் பிலிம்ஸ் இதுவரை 96 படங்களை தயாரித்துள்ளது. விரைவில் 100வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இதில் விஜய் நடிக்கிறார். அவருடன் இணைந்து நானும் ஒரு கேரக்டரில் நடிக்க அப்பா ஆர்.பி.சவுத்ரியிடம் வாய்ப்பு கேட்டுள்ளேன். இதற்காக அவர் எனக்கு சம்பளம் கூட கொடுக்க வேண்டாம்’ என்றார். 

Related Stories: