கிஸ் காட்சியில் நடித்ததால் அழுதேன்: ராஷ்மிகா பிளாஷ்பேக்

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த காட்சியில் நடித்த பிறகு அழ வேண்டியதாகிவிட்டது என்றார், ராஷ்மிகா. அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ இந்திப் படத்தில் நடித்துள்ளார், ராஷ்மிகா. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வு பற்றி கேட்டபோது கூறியதாவது: வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நம்மை மீறிய செயல்கள் நடக்கும். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அது சாத்தியம் கிடையாது. அந்தவகையில் எனது வாழ்க்கையில் சோகமான விஷயங்கள் பல நடந்துள்ளன. எனது நடிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை பற்றி கூறுகிறேன். ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தேன். இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும். கதைக்கு தேவை என்பதால், அதுபோல் கிஸ் கொடுத்து நடித்தேன்.

படம் வெளியான பிறகு, ரசிகர்கள் என்ற போர்வையில் பலபேர் என்னை சமூக வலைத்தளத்தில் இழிவாகப் பேசினார்கள். தரக்குறைவாக விமர்சித்தார்கள். அதற்கெல்லாம் இந்த முத்தக்காட்சியை காரணம் காட்டினார்கள். அதை எல்லாம் நான் படித்துவிட்டு மிகவும் அப்செட் ஆனேன். வீட்டிலுள்ள எனது அறைக்கு ஓடிச்சென்று, படுக்கையில் அழுதபடி கிடப்பேன். இதற்கு முன்பு யாருமே இது போன்ற காட்சியில் நடிக்கவில்லையா? என்னை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள் என்பது புரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்வேன். இப்போது எனக்குள் தைரியம் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட எதிர்மறை கருத்துகளையும் இப்போது கையாள தெரிந்துகொண்டேன். அதைஎல்லாம் நான் பேசாமலே கடந்து செல்கிறேன். அதனால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.

Related Stories: