3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்

சென்னை: தீபாவளிக்கு சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம் ரவி நடித்துள்ள 3 படங்கள் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ஜாதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது. இதில் ஹீரோயினாக உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா ரியபோஷப்கா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது.

கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இரும்புத்திரை, ஹீரோ படங்களின் டைரக்டர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதில் ஒருவர் போலீஸ் அதிகாரி, மற்றொருவர் சிறைக் கைதி. ராசி கன்னா, ரெஜிஷா விஜயன் ஹீரோயின்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயம் ரவியின் அகிலன் படமும் தீபாவளி ரிலீசாகும். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கருக்கு போலீஸ் அதிகாரி வேடம். ஜெயம் ரவி, சரக்கு கப்பலில் பணிபுரியும் ஊழியராக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

Related Stories: