ரூ.700 கோடியில் மகாபாரதம் படமாகிறது: அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங் நடிக்கிறார்கள்

மும்பை: பாலிவுட்டில் மகாபாரதத்தை படமாக்க திட்டமிட்டுள்ளனர். ரூ.700 கோடி பட்ஜெட்டில் பல மொழிகளில் இது உருவாக உள்ளது. பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் பிரோஸ் நதியாத்வாலா. அவர் கூறும்போது, ‘மகாபாரதம் 1960களில் இந்தியில் படமாக வெளியாகியுள்ளது. இப்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதை பிரமாண்ட படமாக தயாரிக்க உள்ளேன்’ என்றார். இந்த படத்தில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், நானா படேகர், அனில் கபூர் உள்பட பலர் நடிப்பார்கள் என பிரோஸ் நதியாத்வாலா கூறியுள்ளார்.

மொத்தம் 3 பாகமாக இதை படமாக்கவும் 5டியில் உருவாக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். முதல் பாகத்துக்கான படப்பிடிப்பை 2025ல் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு திரைக்கதை எழுத, ஒரு குழுவை உருவாக்கும் பணியில் பிரோஸ் நதியாத்வாலா இறங்கியுள்ளார். திரைக்கதை எழுதும் பணி தொடங்கியதும், படத்தை யார் இயக்குவது என்பதையும் முடிவு செய்ய உள்ளனர். படத்தில் தென்னிந்திய நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்ய இருக்கிறார்கள். மகாபாரதம் கதையை ஆமிர்கான் படமாக்க ஆசைப்பட்டார். அதேபோல், ராஜமவுலியும் மகாபாரதத்தை படமாக எடுக்க விரும்பினார். இந்நிலையில் இவர்களையெல்லாம் பிரோஸ் நதியாத்வாலா முந்திக்கொண்டிருக்கிறார்.

Related Stories: