நம்பர்1 இடத்தை பிடிப்பேன்: ஸ்ரீலீலா சபதம்

ஐதராபாத்: தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், ஸ்ரீலீலா. ‘புஷ்பா 2: தி ரூல்ஸ்’ படத்தில் அவரது கவர்ச்சி நடனத்துக்கு அதிக பாராட்டு கிடைத்தது. தற்போது இந்தி படத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடிக்கும் அவர் கூறுகையில், ‘தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,

ரவி மோகன், அதர்வா முரளி இணைந்துள்ள ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறேன். இதில் நான் யாருக்கு ஜோடி என்பது சஸ்பென்ஸ். தமிழில் நடிப்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழில் சரளமாகப் பேச கற்றுக்கொள்கிறேன். நான் மருத்துவம் படித்தவள். சினிமாவில் நடிக்க வந்த பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் முன்னணி இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறேன். பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தை பிடிப்பேன். இந்தி படங்களில் நடிப்பது என்பது பலரது கனவு. எனக்கு அது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தரமான இடத்தை பிடிப்பேன்’ என்று சொன்னார்.

Related Stories: