காதில் குரல்கள் கேட்கும் மனநோயால் ஸ்ரீ பாதிப்பு: நண்பர் திடுக் தகவல்

சென்னை: ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ என பல படங்களில் ஹீரோவாக நடித்தார் ஸ்ரீ. இவரின் சமீபத்திய புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையடையவும் செய்துள்ளன. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மெலிந்த நிலையில், தலை முடியை கலர் செய்து ஆபாச வீடியோக்கள், பாட்டு என அவரின் இயல்பு நிலையை மறந்து இணையத்தில் வீடியோவை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இவருக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர். பலரும் இவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டிலேயே ஸ்ரீ இல்லை என்றும் ஹரியானாவில் உள்ள குரேகான் நகரில் தான் தற்போது ஸ்ரீ வசித்து வருவதாகவும் அவரது நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். schizophrenia என்கிற மன நோயால் ஸ்ரீ பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும் என்றும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக தனிமையில் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விரக்தியின் காரணமாக அவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்கின்றனர். ஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் அவர் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டோம். விரைவில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்போம் என்றும் ஸ்ரீயின் நண்பர் கூறியுள்ளார்.

Related Stories: