சென்னை: பிரபல நடிகர் ஸ்ரீ யின் உடல்நிலை மோசமாகி எலும்பும் தோலுமாக இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆன நிலையில், அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை சினிமா கலைஞர்கள், குடும்பத்தினர் தேடி வருகிறார்கள். கடைசியாக இறுகப்பற்று படத்தில் ஸ்ரீ நடித்தார். அதில் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இறுகப்பற்று பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை நெட்டிசன்கள் தாக்கி கமெண்ட் செய்து வந்த நிலையில் அவர் தற்போது சர்ச்சைக்கு பதில் கொடுத்து இருக்கிறார் .
‘‘நடிகர்ஸ்ரீ உடல்நிலை பற்றி நாங்களும் கவலை கொண்டிருக்கிறோம். அவர் குடும்பம், நண்பர்கள் மட்டுமின்றி நாங்களும் அவரை கண்டுபிடிக்க நீண்டகாலமாக முயற்சி செய்கிறோம். இதை பற்றி பல ஊகங்கள் அடிப்படையிலான செய்தி பரவுவது துரதிருஷ்டவசமானது. ஸ்ரீ யை கண்டுபிடித்து மீண்டும் அவரை பழைய நிலைக்கு மாற்றுவது தான் முதலில் அவசியம். அதை செய்ய யாராவது உதவினால் நன்றாக இருக்கும்’’ என கூறி இருக்கிறார்.