கிசுகிசு பரவியதால் சலசலப்பு: கயாடு லோஹருக்கு தமன் தந்த பரிசு

சென்னை: ‘டிராகன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கயாடு லோஹரின் மார்க்கெட் எகிறி விட்டது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கி அதர்வா முரளி, தமன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகும் ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கயாடு லோஹர் தனது 25வது பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார். அப்போது படக்குழு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதில் தமன் கொடுத்த ஒரு பரிசு தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் ‘பாய்ஸ்’ படத்திற்கு பிறகு ‘இதயம் முரளி’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் கயாடு லோஹரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். அந்த வீடியோவில் தமன் கையாடுவுக்கு அவரது புகைப்படங்களை கொண்ட ஃபிரேம் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

அதற்கு கயாடு லோஹர், ‘சோ ஸ்வீட்’ என பதிலளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. கயாடுவுடன் நடித்த பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து கூட இதுவரை அவருக்கு பரிசு தந்ததில்லை. பட ஹீரோ அதர்வாவும் அமைதியாக இருக்கிறார். நீங்க என்ன செய்றீங்க தமன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கயாடுவுக்கு முக்கியத்துவம் அளித்து தமன் பரிசளித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: